கடற்படையில் மோட்டார் டிரைவர்

7/9/2018 2:10:05 PM

கடற்படையில் மோட்டார் டிரைவர்

இந்திய கடற்படையில் சிவிலியன் மோட்டார் டிரைவர் கிரேடு-2 பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:

Civilian Motor Driver Grade II.

24 இடங்கள் (பொது-14, எஸ்சி-7, எஸ்டி-3). இவற்றில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், ஒரு இடம் விளையாட்டு வீரருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

ரூ.2,500-81,100.

வயது வரம்பு:

18 முதல் 25க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம்.

எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு/டிரேடு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் www.hqgnanavyciviliansrect.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 11.7.2018.

X