எய்ம்ஸில் 551 நர்சிங் ஆபீசர்

7/9/2018 2:15:54 PM

எய்ம்ஸில் 551 நர்சிங் ஆபீசர்

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் 151 நர்சிங் ஆபீசர் பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

Nursing Officer.

551 இடங்கள் (பொது-279, ஒபிசி-149, எஸ்சி-82, எஸ்டி-41). இவற்றில் 31 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

ரூ.9,300-34,800.

வயதுவரம்பு:

18 முதல் 30க்குள்.

தகுதி:

பி.எஸ்சி (ஹானர்ஸ்) நர்சிங்/பி.எஸ்சி (நர்சிங்) பட்டம் அல்லது நர்சிங் பாடத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்று இந்திய/மாநில நர்சிங் கவுன்சிலில் நர்சிங் மற்றும் மிட்வொய்ப் ஆக பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஜெனரல் நர்சிங் மிட்வொய்பரி பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து இந்திய/மாநில நர்சிங் கவுன்சிலில் நர்சிங் மற்றும் மிட்வொய்ப் ஆக பதிவு செய்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்:

பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.500/-. எஸ்சி.,எஸ்டியினருக்கு ரூ.100/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.aiimsexams.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 12.7.2018.

X