கோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்

7/10/2018 1:58:54 PM

கோவா கடற்படையில் டிரைவர் பணியிடம்

கோவாவில் உள்ள தலைமை இந்திய கடற்படை தளத்தில் காலியாக உள்ள 24 பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி:

Civilian Motor Driver Grade II:

24 இடங்கள் (பொது-14, எஸ்சி-7, எஸ்டி-3). இதில் 2 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், ஒரு இடம் விளையாட்டு வீரர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சம்பள விகிதம்:

ரூ.25,500-81,100.

வயது:

18 முதல் 25க்குள். விளையாட்டு வீரர்கள்/எஸ்சி.,எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய ஆண்டுகளுக்கு ஏற்பவும், அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தகுதி:

10ம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, ஸ்கில்டு/டிரேடு தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் போது ஆன்லைன் விண்ணப்ப படிவத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் ஒரிஜினல் மற்றும் நகல்களை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் கூடுதல் விவரங்களை https://www.indiannavy.nic.in/content/personnel என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.7.2018.

X