தாதுவள ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை! 245 பேருக்கு வாய்ப்பு!

8/2/2018 4:35:44 PM

தாதுவள ஆராய்ச்சிக் கழகத்தில் வேலை! 245 பேருக்கு வாய்ப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தாதுவள ஆராய்ச்சிக் கழக நிறுவனம் சுருக்கமாக எம்.இ.சி.எல். (Mineral Exploration Corporation Limited - MECL) என்று அழைக்கப்படுகிறது.  பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இந்த நிறுவனத்தில் தற்போது டெபுடி ஜெனரல் மேனேஜர், மேனேஜர், அசிஸ்டன்ட், மெக்கானிக், டிரைவர்  உள்ளிட்ட பணியிடங்களுக்கு 245 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களில் அதிகபட்சமாக டெக்னீசியன் டிரில்லிங் பணிக்கு 41  இடங்களும், மெட்டீரியல் அசிஸ்டன்ட் பணிக்கு 18 இடங்களும், அசிஸ்டன்ட் (எச்.ஆர்.) பணிக்கு 29 இடங்களும், டிரைவர் பணிக்கு 30 இடங்களும்  உள்ளன. இதர பணிகளுக்கான காலியிட எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க  விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

கல்வித் தகுதி:

அதிகாரி தரத்திலான பணிகளுக்கு சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ. மற்றும் பி.இ., பி.டெக். போன்ற எஞ்சினியரிங்-தொழில்நுட்பப் படிப்புகள், எம்.எஸ்சி., எம்.டெக்.  படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இளநிலைப் பட்டப்படிப்புகள், டிப்ளமோ எஞ்சினியரிங் படிப்புகள், ஐ.டி.ஐ., தட்டச்சு தெரிந்தவர்களுக்கு அலுவலக  பணியிடங்களில் வாய்ப்புகள் உள்ளன.

வயது வரம்பு:

ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அதிகாரி தரத்திலான பணிகளுக்கு 40 முதல் 50 வயதுடையவர்களுக்கு பணிகள் உள்ளன.  அசிஸ்டன்ட் உள்ளிட்ட அலுவலக பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள்,  முன்னாள் படைவீரர்களுக்கு வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு அனுமதிக்கப் படுகிறது. ஒவ்வொரு பணிக்குமான சரியான வயது வரம்பு,  கல்வித் தகுதி, பணியிட விவரங்களை இணையதளத்தில் பார்க்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 16.8.2018.

விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்துகொள்ளவும் www.mecl.co.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

X