மத்திய அரசு மருத்துவமனையில் 991 நர்சிங் ஆபீசர் பணி

9/3/2018 2:45:41 PM

மத்திய அரசு மருத்துவமனையில் 991 நர்சிங் ஆபீசர் பணி

புதுடெல்லியிலுள்ள மத்திய அரசின் கீழ் இயங்கும் சப்தர்ஜங் மருத்துவமனையில் 991 நர்சிங் ஆபீசர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: நர்சிங் ஆபீசர். 991 காலியிடங்கள் (பொது-568, ஒபிசி-226, எஸ்சி-128, எஸ்டி-69). இதில் 50 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

சம்பளம்: 7வது ஊதியக்குழுப்படி சம்பளம் வழங்கப்படும். வயது: 35க்குள். ஓபிசியினருக்கு 3 வருடங்களும், எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அவர்கள் ராணுவத்தில் பணியாற்றிய ஆண்டுகளுக்கும் ஏற்ப தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: நர்சிங் பாடப்பிரிவில் பி.எஸ்சி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பி.எஸ்சி (நர்சிங்) பட்டம் பெற்று நர்ஸ்/நர்ஸ் மற்றும் மிட்வொய்ப் ஆக மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் அல்லது ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பாடத்தில் டிப்ளமோ முடித்து மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.ஆன்லைன் எழுத்துத்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஓபிசிக்கு ரூ 1000/- எஸ்சி.,எஸ்டியினருக்கு ₹500/-. ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

கூடுதல் விவரங்களை விண்ணப்பதாரர்கள் http://www.vmmc-sjh.nic.in/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.09.2018.

X