இந்திய கடற்படையில் குருப் ‘சி’ பணிகள்

9/11/2018 5:27:52 PM

இந்திய கடற்படையில் குருப் ‘சி’ பணிகள்

விசாகப்பட்டினத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் கடற்படை கிழக்கு கமான்டண்ட் தலைமை அலுவலகத்தில் பல்நோக்கு பணியாளர் இடங்கள் (குருப்-சி) காலியாக உள்ளன. எஸ்எஸ்எல்சி படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:
1. Multi Tasking Staff (Non Industrial): Dresser: 2 இடங்கள் (பொது)
2. MTS : (Non Industrial): Dhobi: 15 இடங்கள் (பொது-12, எஸ்சி-1, ஒபிசி-2)
3. MTS: (Non Industrial): Mali: 15 இடங்கள் (பொது-8, எஸ்டி-3, ஒபிசி-4)
4. MTS (Non Industrial): Ward Sahayika (for Women Only): 19 இடங்கள் (பொது-10, எஸ்சி-4,, ஒபிசி-5)
5. MTS (Non Industrial): Laboratory Bearer : 1 இடம் (ஒபிசி):
6. MTS (Non Industrial): Masalchi: 1 இடம் (பொது)

மேற்குறிப்பிட்ட பணிகளில் 5 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும், 2 இடங்கள் விளையாட்டு வீரர்களுக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.கல்வித்தகுதி: மெட்ரிகுலேசனுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் பணியாற்றிய அனுபவம்.

வயது: 14.9.18 அன்று 18 முதல் 25க்குள் (இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்)
மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.indiannavy.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 14.9.2018.

X