பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் சிறப்பு அதிகாரி பணி காத்திருக்கிறது

9/20/2018 3:20:44 PM

பேங்க் ஆப் மகாராஷ்டிராவில் சிறப்பு அதிகாரி பணி காத்திருக்கிறது

இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் 1850 பேங்க் ஆப் மகாராஷ்டிரா கிளைகளிலும், 4 யூனியன் பிரதேங்களில் உள்ள கிளைகளிலும் காலியாக உள்ள 59 சிறப்பு அதிகாரிகள் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Chartered Accountant/ Cost & Management Accountants in Scale I: 50 இடங்கள் (பொது-27, ஒபிசி-13, எஸ்சி-7, எஸ்டி-3). இவற்றில் 3 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. வயது: 20லிருந்து 30க்குள். தகுதி: பட்டப்படிப்புடன் சிஏ/ஐசிடபிள்யூஏ

2. Economist- Scale II: 1 இடம் (பொது) வயது: 23 லிருந்து 33க்குள். தகுதி: பொருளியல் பாடத்தில் எம்.ஏ மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்களில் 2 ஆண்டு முன் அனுபவம்.

3. Manager- Costing Scale-II: 1 இடம் (பொது). வயது: 23 லிருந்து 30க்குள். தகுதி: ஐசிடபிள்யூஏ/ பொருளியல் பாடத்தில் எம்.ஏ மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்களில் 2 ஆண்டு முன்அனுபவம்.

4. Economist- Scale IV: 1 இடம் (பொது) . வயது: 28 லிருந்து 40க்குள். தகுதி: பொருளியல் பாடத்தில் பி.ஹெச்டி மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்களில் 6 ஆண்டுகள் முன்அனுபவம்.

5. Treasury Dealer (Domestic) Scale-III/IV: 3 இடங்கள் (பொது). வயது: 23 முதல் 40க்குள். தகுதி: எம்பிஏ/சிஏ/சிஎப்ஏ/ஐசிடபிள்யூஏ மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.

6. Treasury Dealer (Forex) Scale-III/IV: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது: 23 முதல் 40க்குள். தகுதி: எம்பிஏ/சிஏ/சிஎப்ஏ/ஐசிடபிள்யூஏ மற்றும் வங்கிகள், நிதி நிறுவனங்களில் 3 ஆண்டுகள் முன்அனுபவம்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கும், கூடுதல் விவரங்களுக்கும் www.bankofmaharashtra.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 23.9.2018.

X