இந்திய கடற்படையில் பி.இ., பி.எல். படித்தவர்களுக்கு வேலை

10/3/2018 12:41:01 PM

இந்திய கடற்படையில் பி.இ., பி.எல். படித்தவர்களுக்கு வேலை

இந்திய கடற்படையில் பி.இ., மற்றும் பி.எல். படித்தவர்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  திருமணமாகாத ஆண்/பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Short Service Commission (Logistics): 20 இடங்கள். தகுதி: பி.இ./பி.டெக்/எம்பிஏ/எம்சிஏ/எம்.எஸ்சி (ஐடி)/பி.ஆர்க் பட்டம் அல்லது பிஎஸ்சி/பி.காம்/ பிஎஸ்சி (ஐடி) பட்டம் பெற்று Finance/Logistics/Supply Chain Management/Material Management பாடத்தில் முதுநிலை டிப்ளமோ. வயது: 2.7.1994 முதல் 1.1.2000த்திற்குள் பிறந்திருக்க வேண்டும்.
2. Short Service Commission (IT): 15 இடங்கள் தகுதி: Computer Science/Computer Engineering/IT பாடத்தில் பி.இ.,/பி.டெக்.,/எம்.எஸ்சி/பி.எஸ்சி/எம்.டெக் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பிசிஏ/எம்சிஏ பட்டம். வயது: 2.7.1994 முதல் 1.1.2000த்திற்குள் பிறந்திருக்க வேண்டும். ஆண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
3. Short Service Commission: (Law): 2 இடங்கள். தகுதி: சட்டம் பாடப் பிரிவில் இளநிலை பட்டம். வயது: 2.7.1992 முதல் 1.7.1997க்குள் பிறந்திருக்க வேண்டும்.

மூன்று பணிகளுக்கான சம்பளம்: ரூ.56,100-1,10,700.

உடற்தகுதி: ஆண்களின் உயரம்: 157 செ.மீ. பெண்களின் உயரம் 152 செ.மீ.

கல்வித்தகுதி, எஸ்எஸ்பி நேர்முகத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். பெங்களூரு, போபால், கோவை, விசாகப்பட்டினம், கொல்கத்தா ஆகிய இடங்களில் நேர்முகத்தேர்வு நடைபெறும். நவம்பர் 2018 முதல் மார்ச் 2019 வரை நேர்முகத்தேர்வு நடைபெறும். பணிக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ஜூன் 2019 இறுதி வாரத்திலிருந்து 22 வாரங்களுக்கு கேரளா, இந்தியன் நேவல் அகாடமியில் பயிற்சி நடைபெறும். விண்ணப்பதாரர்கள் www.joinindiannavy.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 5.10.2018.

X