இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் கிளார்க், ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்

10/3/2018 5:42:47 PM

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் கிளார்க், ஸ்டெனோகிராபர் பணியிடங்கள்

அகமதாபாத்தில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் National Institute of Occupational Healthல் அலுவலக உதவியாளர், ஸ்டெனோகிராபர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

அ. Office Assistant: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1).

சம்பளம்: ரூ.35,400.

வயது: 30க்குள்.

தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஆ. Stenographer: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, எஸ்சி-1). தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆங்கிலம்/இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் சுருக்கெழுத்தில் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் கணினி திறனறிவு பெற்றிருக்க வேண்டும்.
இ. Upper Divisiion Clerk: 1 இடம் (பொது). தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள், இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஆ மற்றும் இ பணிகளுக்கான சம்பளம் மற்றும் வயது விவரம்: ரூ.25,500, 18 முதல் 27க்குள். ஒபிசி/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு விதிமுறைப்படி தளர்வு வழங்கப்படும். தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு/ஸ்கில்டு தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.300/-. இதை The Director, National Institute of Occupational Health என்ற பெயரில் அகமதாபாத்தில் மாற்றத்தக்க வகையில் டிடி/போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.icmr.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 22.10.2018.

X