பிஇ படித்தவர்கள் டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் இன்ஜினியர் ஆகலாம்

10/17/2018 3:27:22 PM

பிஇ படித்தவர்கள் டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் இன்ஜினியர் ஆகலாம்

மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டெல்லி வளர்ச்சி ஆணையத்தில் உதவி நிர்வாக இன்ஜினியர் உதவி நிர்வாக இன்ஜினியர் ஆகிய இடங்கள் காலியாக உள்ளன.

பணி விவரம்:

1. Assistant Executive Engineer (Civil): 11 இடங்கள் (பொது-7, ஓபிசி-3, எஸ்டி-1). இவற்றில் ஒரு இடம் செவித்திறன் குறைந்தோருக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ., வயது: 15.02.2019 அன்று 21 முதல் 30க்குள்.
2. Assistant Executive Engineer (Electrical & Mechanical): 3 இடங்கள் (பொது). தகுதி: எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் இன்ஜனியரிங் பாடத்தில் பி.இ., வயது: 15.02.2019 அன்று 21 முதல் 30க்குள்.

விண்ணப்பதாரர்கள் கேட்-2019 தேர்வுக்கு விண்ணப்பித்திருக்க வேண்டும். மாதிரி ஆன்லைன் விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.dda.org.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2019.

X