ராணுவத்தில் 85 மத போதகர் பணிகள்

10/29/2018 2:20:39 PM

ராணுவத்தில் 85 மத போதகர் பணிகள்

பணி: Religious Teacher (Junior Commissioned Officer). 85 இடங்கள் (பண்டிட்-78, மவுலவி (சன்னி)-5, பாஸ்ட்ரேட்-2).
தகுதி: பண்டிட்- இந்து மத போதகர் பணிக்கேற்ற வகையில் சம்ஸ்கிருத மொழியில் ஆச்சார்யா பட்டம் அல்லது கரம் கந்த் சமய பாடத்தில் ஒரு வருட டிப்ளமோ படிப்பை முடித்து சாஸ்திரி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மவுலவி (சன்னி): முஸ்லிம் மத குரு பணிக்குரிய அரபியில் மவுலவி ஆலிம் அல்லது உருது மொழியில் அடிப் ஆலிம் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

பேடர்: கிறிஸ்தவர் மத போதகர் பணிக்கு உள்ளூர் பிஷப்பால் அங்கீகரிக்கப்பட்ட தகுதியை பெற்றிருக்க வேண்டும்.

வயது: 25 முதல் 34க்குள் இருக்க வேண்டும்.உடற்தகுதி: உயரம்: 160 செ.மீ., மார்பளவு: 77 செ.மீ., எடை: 50 கிலோ.எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

கூடுதல் விவரங்களை விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொண்டு

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 3.11.2018.

X