CISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி!- 519 பேருக்கு வாய்ப்பு!

12/5/2018 3:06:47 PM

 CISF-ல் உதவி துணை ஆய்வாளர் பணி!- 519 பேருக்கு வாய்ப்பு!

நன்றி குங்குமம் சிமிழ் - கல்வி வழிகாட்டி

இந்தியாவில் உள்ள துணை ராணுவப் படைகளில் ஒன்று மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படை(Central Industrial Security Force). இப்படை இந்தியாவின் முக்கிய தொழில் நிலையங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட துணை ராணுவப் படையாகும். அணு உலைகள், விண்வெளி ஆய்வகங்கள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், பாதுகாப்பு தேவைப்படும் அரசு கட்டடங்கள், புராதன சின்னங்கள் போன்றவற்றை பாதுகாப்பதே இப்படைப் பிரிவுக்கான வேலை. இதன் தலைமைச் செயலகம் புதுடெல்லியில் உள்ளது.

இந்தப் படை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்குகிறது. தற்போது இப்படைப் பிரிவில் உள்ள 519 உதவி துணை ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

முன் அனுபவம்: குறைந்தது 5 வருடம் முன் அனுபவம் (Constable/GD, Head Constable/GD and Constable/TM) பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.cisf.gov.in/wp-content/uploads/2018/11/4201.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து (Zonal DIsG viz., DIG (NZ-I) New Delhi, DIG (SZ) Chennai, DIG (WZ-I) Mumbai, DIG (EZ) Patna and DIG (SEZ) Kolkata.) அந்தந்த மண்டல முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசித் தேதி: 12.12.2018

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் மருத்துவ சோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணியிடம் குறித்த மேலும் விவரங்களை அறிய https://www.cisf.gov.in/wp-content/uploads/2018/11/4201.pdf என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

X