டிப்ளமோ/ஐடிஐ படித்தவர்களுக்கு செயிலில் 156 இடங்கள்

12/10/2018 2:42:17 PM

டிப்ளமோ/ஐடிஐ படித்தவர்களுக்கு செயிலில் 156 இடங்கள்

மேற்கு வங்காளத்தில் உள்ள ஸ்டீல் அதாரிட்டி ஆப் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 156 இடங்களுக்கு டிப்ளமோ/ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Operator Cum Technician (Trainee): 126 இடங்கள் (பொது-64, எஸ்சி-28, எஸ்டி-7, ஓபிசி-27). இவற்றில் 23 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 18 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. சம்பளம்: ரூ.16,800- ரூ.24,110. தகுதி: Mechanical/Metallurgy/Electrical/Instrumentation/Chemical/Civil Ceramics ஆகிய பாடப் பிரிவுகளில் 3 வருட டிப்ளமோ தேர்ச்சி. முதல் வருடம் ரூ.10,700ம், இரண்டாம் வருடம் ரூ.12,200ம் வழங்கப்படும்.

2. Attendant Cum Technician (Trainee): 30 இடங்கள். (பொது-17, எஸ்சி-6, எஸ்டி-1, ஓபிசி-6). இவற்றில் 16 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கும், 4 இடங்கள் முன்னாள் ராணுவத்தினருக்கும் உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதல் ஆண்டு ரூ.8,500ம், 2ம் வருடம் ரூ.10,000ம் வழங்கப்படும்.

மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்குமான வயது: 28க்குள். (எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்)

விண்ணப்பதாரர்கள் www.sail.co.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 14.12.2018.

X