வனத்துறை மேலாண்மை முதுநிலைப் பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை

1/8/2019 4:51:36 PM

வனத்துறை மேலாண்மை முதுநிலைப் பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கை

மத்திய அரசின் கீழ் தன்னாட்சி அங்கீகாரத்துடன் போபாலில் இயங்கிவருகிறது இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபாரஸ்ட் மேனேஜ்மென்ட் கல்வி நிறுவனம். இதில் முதுநிலைப் பட்டயப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வழங்கப்படும் படிப்புகள் : போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் ஃபாரஸ்ட்ரி மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.எஃப்.எம்.,)போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் சஸ்டெய்னபிலிட்டி மேனேஜ்மென்ட் (பி.ஜி.டி.எஸ்.எம்.)

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 50% மதிப்பெண்களுடன் இளநிலை பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 சதவீதம் விலக்கு உண்டு. இறுதியாண்டு பயிலும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். குறிப்பாக ‘கேட்’அல்லது எக்ஸாட்’தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பத்தை ஐ.ஐ.எஃப்.எம்., கல்வி நிறுவனத்தின் http://iifm.ac.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை நிர்வாக முகவரிக்கு அஞ்சல் வழியில் அனுப்பி வைக்கலாம் அல்லது விண்ணப்பத்தை நேரடியாக ஆன்லைன் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.

சேர்க்கை முறை: தகுதித் தேர்வில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு சேர்க்கை வழங்கப்படும். இதற்கான தேர்வு மையங்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 20.2.2019

மேலும் விவரங்களுக்கு : http://iifm.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

- தோ.திருத்துவராஜ்

X