வேதி உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணிகள்

2/11/2019 5:09:37 PM

வேதி உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் சயின்டிஸ்ட் பணிகள்

கொல்கத்தாவில் உள்ள Indian Institute of Chemical Biologyயில் சயின்டிஸ்ட், சீனியர் சயின்டிஸ்ட், பிரின்சிபல் சயின்டிஸ்ட் ஆகிய 12 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

1. Scientist: 2 இடங்கள் (எஸ்சி-1, எஸ்டி-1). சம்பளம்: ரூ. 97,889. வயது: 32க்குள். தகுதி: Microbiology/physiology/ Bio-Technology/Zoology/Bio-chemistry பாடப்பிரிவில் பி.எச்டி பட்டம்.

2. Senior Scientist: 8 இடங்கள் (பொது-4, ஒபிசி-2, எஸ்சி-2). சம்பளம்: ரூ. 1,12,652. வயது: 37க்குள். தகுதி: Microbiology/Physiology/Bio Technology/Zoology/ Bio chemistry/ Science பாடப்பிரிவில் 2 வருட பணி அனுபவம்.

3. Principal Scientist: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ. 1,71,571. வயது: 45க்குள். தகுதி: Science பாடத்தில் பி.எச்டி பட்டம் பெற்று 3 வருட பணி அனுபவம்.
விண்ணப்ப கட்டணம்: ரூ. 100/-. இதை The Director, CSIR, Indian Institute of Chemical Biology என்ற பெயரில் கொல்கத்தாவில் மாற்றத்தக்க வகையில் குறுக்கு கோடிட்ட டிடியாக எடுக்க வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பதாரர்கள்  http://iicb.res.in/ என்ற இணையதளம் மூலம் கூடுதல் விவரங்களை தெரிந்து கொண்டு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 28.2.2019.

X