இரும்பு உருக்கு ஆலையில் டெக்னீசியன் வேலை

2/18/2019 3:58:28 PM

இரும்பு உருக்கு ஆலையில் டெக்னீசியன் வேலை

நிறுவனம்: செயில் எனப்படும் ஸ்டீல் அதாரிடி ஆஃப் இந்தியா இரும்பு உருக்கு ஆலையின் பொகாரோ கிளை

வேலை: ஆபரேட்டர் கம் டெக்னீசியன், அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் பிரிவுகளில் காலியாக இருக்கும் 275 இடங்களை  நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள்: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் டிரெய்னியில் 95, பாய்லர் பிரிவில் 10, அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் பிரிவில்  டிரெய்னியில் 121, இதே பிரிவில் எஸ்.டி., பிரிவினருக்கு பிரத்யேகமாக 49 இடங்கள் காலியாக உள்ளன.

கல்வித் தகுதி: ஆபரேட்டர் கம் டெக்னீசியன் பிரிவுக்கு எஞ்சினியரிங் டிப்ளமோ, அட்டென்டண்ட் கம் டெக்னீசியன் பதவிக்கு பத்தாம்  வகுப்பை முடித்து என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., படிப்பை உரிய டிரேடு பிரிவில் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு

பயிற்சிக் காலம்: முதல் பிரிவுக்கு இரண்டு ஆண்டுகளும், இரண்டாவது பிரிவுக்கு ஒரு ஆண்டும் புரோபேஷன் முறையில் பணிபுரிய  வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.2.2019

X