பயோ மெடிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள்

2/19/2019 2:39:57 PM

பயோ மெடிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியிடங்கள்

பணியிடங்கள் விவரம்:

1. Assistant: 2 இடங்கள் (பொது). வயது: 30க்குள். சம்பளம்: ரூ.35,400-1,12,400. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் இயக்குவதில் போதிய அனுபவம் இருக்க வேண்டும்.
2. Upper Division Clerk: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.25,500-81,100. தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகளும் அல்லது இந்தியில் 30 வார்த்தைகளும் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
3. Technical Assistant (Life Sciences): 3 இடங்கள் (பொது-1, ஒபிசி-2). சம்பளம்: ரூ.35,400- 1,12,400. வயது: 30க்குள். தகுதி: Bio Chemistry/Genetics/Micro biology/Life Sciences/Pharmacology/Zoology ஆகிய பாடங்களில்  60% தேர்ச்சியுடன் மூன்றாண்டு பட்டப்படிப்பு.
4. Technical Assistant: (Computer Science): 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.35,400-1,12,400. வயது: 30க்குள். கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் 60% தேர்ச்சியுடன் பி.எஸ்சி அல்லது டிப்ளமோ, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தில் அல்லது தகவல் தொழில்நுட்பம் பாடத்தில் பி.இ. பட்டம்.
5. Laboratory Attendant-I: 12 இடங்கள் (பொது-9, ஒபிசி-2, எஸ்டி-1). சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பரிசோதனை மையத்தில் ஓராண்டு முன்அனுபவம்.
6. Multi Tasking Staff: 4 இடங்கள் (பொது-3, ஒபிசி-1). சம்பளம்: ரூ.18,000-56,900. வயது: 18 முதல் 25க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்பிக்கும் முறை, தேர்வு முறை, அனுப்ப வேண்டிய முகவரி உள்ளிட்ட விவரங்களுக்கு www.icmr.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 25.2.2019.

X