மத்திய நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள்

3/11/2019 4:43:12 PM

மத்திய நிறுவனத்தில் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள்

சென்னை அடையாறில் உள்ள மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனத்தில் டெக்னிக்கல் ஆபீசர், அசிஸ்டென்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Technical Officer Grade III: 1 இடம் (எஸ்டி). சம்பளம்: ரூ.63,641. வயது: 35க்குள்.

2. Technical Assistant: 16 இடங்கள் (பொது-9, ஓபிசி-6, எஸ்டி-1). சம்பளம்: ரூ.51,006. வயது: 28க்குள். ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி, விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.clri.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்:15.3.2019.

X