மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆராய்ச்சியாளர் பணி

3/20/2019 5:26:28 PM

மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் ஆராய்ச்சியாளர் பணி

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில் பல்வேறு பணிகளுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

நிறுவனம்: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம்

வேலை: சுற்றுச்சூழல் விஞ்ஞானி, உதவிப் பொறியாளர், உதவியாளர் மற்றும் தட்டச்சர் வேலை

காலியிடங்கள்: மொத்தம் 224. உதவிப் பொறியாளர் 73, சுற்றுச்சூழல் விஞ்ஞானி 60, உதவியாளர் 36, தட்டச்சர் 55.

கல்வித் தகுதி: உதவிப் பொறியாளர் பணிக்கு சிவில், கெமிக்கல் எஞ்சினியரிங் பட்டப்படிப்பு, முதுநிலை என்விரான்மென்டல் எஞ்சினியரிங், கெமிக்கல் எஞ்சினியரிங், என்விரான்மென்டல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, பெட்ரோலியம் ரீபைனரிங் படித்திருக்க வேண்டும். சுற்றுச்சூழல் விஞ்ஞானி பணிக்கு வேதியியல், உயிரியல், தாவரவியல் உள்ளிட்ட 12 விதமான அறிவியல் படிப்புகளில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவியாளர் பணிக்கு இளநிலை பட்டப்படிப்புகளுடன் கணினி படிப்பில் சான்றிதழ் பெற்றவர்களும், தட்டச்சர் பணிக்கு பட்டப்
படிப்புடன் தட்டச்சு சான்றிதழ், கணினி படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 18 முதல் 30 வரை. குறிப்பிட்ட பிரிவினருக்கு 5 வருட வயது வரம்புத் தளர்வு உண்டு

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31.3.19

மேலதிக தகவல்களுக்கு: www.tnpcb.gov.in

X