ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பணிகள்!

3/21/2019 5:14:57 PM

ரயில்வேயில் தொழில்நுட்பம் சாராத பணிகள்!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

35,277 பேருக்கு வாய்ப்பு!

உலக அளவில் அதிகமான பணியாளர்களைக் கொண்டு செயல்படும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் மத்திய அரசின் கீழ் உள்ள ரயில்வேதான். சமீபத்தில் ரயில்வேயில் 1,30,000 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியானது. இதில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்குச் சுமார் 30,000 இடங்கள் என ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்தத் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கான முழுமையான காலியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் மொத்தம் 35,277 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணி வாரியாக காலியிட விவரம்: ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 4,319 இடங்கள், அக்கவுண்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 760 இடங்கள், ஜூனியர் டைம் கீப்பர் பணிக்கு 17 இடங்கள், டிரெயின்ஸ் கிளார்க் பணிக்கு 592 இடங்கள், கமர்சியல் கம் டிக்கெட் கிளார்க் பணிக்கு 4,940 இடங்கள் உள்ளன.

இவை தவிர, டிராஃபிக் அசிஸ்டன்ட் பணி - 88 இடங்கள், கூட்ஸ் கார்டு பணிக்கு 5,748 இடங்கள், சீனியர் கமர்சியல் கம் டிக்கெட் கிளார்க் பணிக்கு 5,638 இடங்கள், சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 2,873 இடங்கள், ஜூனியர் அக்கவுன்ட் அசிஸ்டன்ட் கம் டைப்பிஸ்ட் பணிக்கு 3,164 இடங்கள், சீனியர் டைம் கீப்பர் 14 இடங்கள், ஸ்டேஷன் மாஸ்டர் பணிக்கு 6,865 இடங்கள், கமர்சியல் அப்ரண்டிஸ் 259 இடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்கவேண்டிய கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களைப் பார்ப்போம்...

கல்வித்தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் பிளஸ் 2 படிப்புடன், தட்டச்சு தெரிந்தவர்கள், கமர்சியல் டிக்கெட் கிளார்க், டிரெயின்ஸ் கிளார்க், ஜூனியர் டைம் கீப்பர், ஜூனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட், அக்கவுன்ட்ஸ் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
பட்டப்படிப்பு படித்தவர்கள் டிராபிக் அசிஸ்டன்ட், கூட்ஸ் கார்டு, சீனியர் கமர்சியல் கம் டிக்கெட் கிளார்க், கமர்சியல் அப்ரண்டிஸ், ஸ்டேஷன் மாஸ்டர் பணி களுக்கு விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்புடன், தட்டச்சு படித்தவர்கள் ஜூனியர் அக்கவுண்ட் அசிஸ்டன்ட் கம் டைப்பிஸ்ட், சீனியர் டைம் கீப்பர், சீனியர் கிளார்க் கம் டைப்பிஸ்ட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

பட்டதாரிகள் தரத்திலான பணியிடங்களுக்கு 33 வயதுக்கு உட்பட்டவர்களும், பிளஸ்-2 தரத்திலான பணியிடங்களுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம்.1.7.2019ம் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு கணக்கிடப்படும்.

கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள், பெண் விண்ணப்பதாரர்கள் மூன்றாம் பாலினத்தவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சிறுபான்மையினர் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது.
பகுதி வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள பணியிடங்களின் விவரம்:-

 விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். முதல்நிலைக் கணினித் தேர்வு ஜூன் முதல் செப்டம்பா் மாத இடைவெளிக்குள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2019(ஏப்ரல் 5-ம் தேதி வரை கட்டணம் செலுத்தலாம்).
மேலும் விரிவான விவரங்களை: http://www.rrcb.gov.in/rrbs.html என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

X