துணை மருத்துவம் படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

3/21/2019 5:18:03 PM

துணை மருத்துவம் படித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கிவரும் இந்திய ரயில்வேயின் அனைத்து மண்டலங்களிலும் தொழில்நுட்பம் சார்ந்த பணியிடங்கள், துணை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் சாராத பணியிடங்கள் எனப் பல்வேறு துறைகள் சார்ந்த சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. ஒவ்வொரு துறை சார்ந்த காலியிடங்களுக்கான அறிவிப்பு தனித் தனியாக வெளியிடப்பட்டுவருகிறது. தற்போது துணை மருத்துவம் சார்ந்த சுமார் 1937 பணியிடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: ஸ்டாஃப் நர்ஸ் 1109, மலேரியா ஆய்வாளர் 289, பார்மசிஸ்ட் 277, ரேடியோகிராஃபர் 61, லேப் அசிஸ்டன்ட் 82 மற்றும் இ.சி.ஜி. டெக்னீஷியன், பிசியோதெரப்பிஸ்ட், ஆப்டோமெட்ரிஸ்ட், டயட்டீஷியன் என சுமார் 1937 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

கல்வித் தகுதி: பல்வேறு பணிகளுக்கான ஆட்சேர்ப்பு நடத்தப்படுவதால் அந்தந்தப் பணி சார்ந்த கல்வித் தகுதியை www.rrbchennai.net என்ற இணையதளம் சென்று காணவும். மேலும் நர்ஸிங், டெண்டல் ஹைஜீனிஸ்ட், ஃபுட் அண்ட் நியூட்ரீஷியன், ஆப்டோமெட்ரி, லேப் டெக்னீஷியன் உள்ளிட்ட பணிகளுக்கு டிப்ளோமா மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.
வயதுவரம்பு: விண்ணப்பிக்க விரும்புவர்கள் 01 ஜூலை 2019 நாளின்படி நாற்பது வயதுக்கு மிகாமலும் பதினெட்டு வயதுக்கு குறையாமலும் இருத்தல் வேண்டும்.

எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு அரசு விதிகளின்படி ஐந்து ஆண்டுகள் வயது வரம்பில் தளர்வு அனுசரிக்கப்படுகிறது.  
தேர்வு செய்யப்படும் முறை: இந்திய ரயில்வே வேலைவாய்ப்பு முகமையால் நடத்தப்படும் கணினி மூலமான தேர்வு (Computer based test) அடிப்படையில் ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் http://www.rrbchennai.net என்ற இணையதளம் சென்று பொதுப்பிரிவினர் ரூ.500ம், எஸ்.சி / எஸ்.டி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ. 250ம் விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 2.4.2019.
மேலும் முழு விவரங்களுக்கு www.rrbchennai.net என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

தமிழக காவல்துறையில் காவல் உதவி ஆய்வாளர் பணி!

969 பேருக்கு வாய்ப்பு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் மூலம் 969 காவல் உதவி ஆய்வாளர் காலிப்பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இந்த தேர்வுக் குழுமம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘தமிழகக் காவல்துறையில் காலியாக 969 (தாலுகா, ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை) உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களைத் தேர்வு செய்யும் வகையில் விரைவில் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்தத் தேர்வு எழுத விரும்புபவர்கள் தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக்குழுமத்தின் www.tnusrbonline.org என்ற இணையதளத்தின் மூலமாக மட்டும் மார்ச் 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் தமிழ்நாடு சீருடைத் தேர்வுக் குழும அலுவலகம், அனைத்து மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம், மாநகரக் காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் தேர்வு உதவி மையங்கள் மார்ச் மாதம் 20 -ஆம் தேதி முதல் ஏப்ரல் 19-ஆம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும். இந்த உதவி மையத்தை விண்ணப்பதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் விண்ணப்பம் தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால், 044 - 40016200, 044-28413658 என்ற தொலைபேசி எண்களையும், 94990 08445, 91762 43899, 97890 35725 என்ற செல்லிடப்பேசி எண்களையும் தொடர்புகொள்ளலாம்’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X