பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி!

4/17/2019 4:53:25 PM

பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான SBI என்று சொல்லப்படும் பாரத ஸ்டேட் வங்கி, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தன் கிளைகளைக்கொண்ட மிகப்பழைமையான வங்கியாகும். இவ்வங்கி தனது செயல்பாடுகளை கணினிமயமாக்குவதிலும் புதிய சேவைகளை வழங்குவதிலும் முன்னணியில் இருந்துவருகிறது. மேலும் பல்வகை வங்கிச்சேவைகளையும் அளித்துவருகிறது.

இத்தனை சிறப்புகளைக் கொண்ட இந்த வங்கி வேலைதேடும் பட்டதாரி இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பாக புரபெஷனரி அதிகாரி பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மொத்தம் 2 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இடஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவுக்கு 810 இடங்களும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 540 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 300 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 150 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 200 இடங்களும் உள்ளன.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...

கல்வித்தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.4.2019ம் தேதியில் 21 வயது நிரம்பியவர்களாகவும், 30 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., ஓ.பி.சி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ஆகியோர் ரூ.750 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ரூ.125 செலுத்தி விண்ணப்பித்தால் போதுமானது.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.sbi.co.in என்ற  இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 22.4.2019.

ஹால் டிக்கெட்டுகள் மே மாதம் 3-வது வாரத்தில் பதிவிறக்கம் செய்யலாம். முதல்நிலை ஆன்லைன் தேர்வு, வருகிற ஜூன் 8,9,15,16ம் தேதிகளில் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு ஜூலை மாதம் 20-ம் தேதி நடத்தப்படும். நேர்காணல் செப்டம்பர் மாதத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய விரிவான விவரங்களை www.sbi.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

X