கால்நடை தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர்

5/13/2019 3:32:56 PM

கால்நடை தடுப்பு மருந்து நிறுவனத்தில் ஆராய்ச்சி உதவியாளர்

பணி : Research Assistant in the Institute of Veterinary Preventive Medicine, Ranipet.

மொத்த இடங்கள் : 26. (இடஒதுக்கீடு விவரங்களை இணையதளத்தில் பார்க்கவும்)

சம்பளம் : ₹55,500- ₹1,75,700.

வயது : 01.07.2019ன்படி பொது பிரிவினருக்கு 30க்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது.

கல்வித்தகுதி : மைக்ரோ பயாலஜி, பதாலஜி, பாரசிட்டாலஜி, டெய்ரி மைக்ரோ பயாலஜி மற்றும் அனிமல் பயோ டெக்னாலஜி ஆகிய பாடங்களில் எம்.வி.எஸ்சி பட்டம். பிளஸ் 2 வில் தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.

கட்டணம் : ஒருமுறை பதிவு கட்டணம் ₹150/-. தேர்வு கட்டணம் ₹200/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எஸ்சி., எஸ்டியினர், மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு கட்டணத்திலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது. மிகவும் பிற்பட்டோர், பிற்பட்டோருக்கு 3 முறை தேர்வுக் கட்டண விலக்கை பயன்படுத்தியவர்கள் கட்டணத்தை செலுத்த வேண்டும். கட்டணத்தை இந்தியன் வங்கி அல்லது ஸ்டேட் வங்கியில் ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். சென்னை, கோவை, மதுரை ஆகிய மையங்களில் எழுத்துத்தேர்வு நடைபெறும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.05.2019.

X