ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலை

5/20/2019 2:44:59 PM

ஃபெர்டிலைசர் நிறுவனத்தில் வேலை

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் எனும் நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நிறுவனம்: தி ஃபெர்டிலைசர்ஸ் அண்ட் கெமிக்கல்ஸ் திருவாங்கூர் லிமிடெட் எனும் கேரள மாநிலம் திருவாங்கூரில் உள்ள மத்திய அரசு நிறுவனமான உரம் மற்றும் வேதியல் நிறுவனம்.

வேலை: சீனியர் மேனேஜர், கம்பெனி செக்ரட்டரி, டெக்னீஷியன், ஸ்டெனோ உட்பட 21 துறைகளில் வேலை.

காலியிடங்கள்: மொத்தம் 274.

கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ, பி.எஸ்சி, டிகிரி, எம்.பி.பி.எஸ், சி.ஏ, எஞ்சினியரிங் போன்ற படிப்புகளில் ஏதாவது ஒன்றில் தேர்ச்சி பெற்றிருந்தால் இந்த வேலைகளில் ஒன்றுக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: 26 முதல் 48 வரை.

தேர்வு முறை: எழுத்து, திறன் தேர்வு மற்றும் நேர்முகம்.

விண்ணப்பிக்க கடைசித் தேதி: 20.5.19.

மேலதிக தகவல்களுக்கு: www.fact.co.in

X