பட்டதாரிகளுக்கு LIC-ல் அதிகாரி பணி!

6/4/2019 3:43:03 PM

பட்டதாரிகளுக்கு LIC-ல் அதிகாரி பணி!

நன்றி குங்குமம் கல்வி - வழிகாட்டி

* 8,581பேருக்கு வாய்ப்பு!

இந்தியாவில் முக்கியமான பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா என்று அழைக்கப்படும் எல்.ஐ.சி (Life Insurance Corporation of India - LIC) நிறுவனத்தில் ஏ.டி.ஓ (Apprentice Development Officers - ADO) பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர். அதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள எட்டு மண்டலங்களில் மொத்தம் 8,581 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

மண்டலம் வாரியாக காலி பணியிடங்கள்: வடக்கு மண்டலம்  1130, கிழக்கு மண்டலம்  922, மேற்கு மண்டலம்  1753, தெற்கு மண்டலம்  1257, மத்திய மண்டலம்  525, மத்திய & தென் மண்டலம்  1251, மத்திய & வடக்கு மண்டலம்  1042, மத்திய & கிழக்கு மண்டலம்  701.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு. எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு முன்னுரிமை உண்டு.

வயது வரம்பு: பொதுப் பிரிவினருக்கு 21-30 வரை. சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்: பயிற்சியின் காலத்தில் ஊக்கத்தொகையாக மாதம் ரூ. 37,345 (அனைத்து படி சம்பளம் உட்பட) வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியில் சேருவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எல்.ஐ.சி-யின் https://www.licindia.in/Bottom-Links/careers என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்போது விண்ணப்பதாரர்கள் தங்களுடைய சுய விவரங்கள், கல்வித் தகுதி விவரங்கள் உள்ளிட்டவற்றை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். பதிவு செய்த பின்னர் விண்ணப்பப் படிவத்தை பிரிண்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.600, எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் ரூ.50 விண்ணப்பக் கட்டணமாக ஆன்லைன் மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை: ஆன்லைன் தேர்வு, நேர்முகத் தேர்வு, மருத்துவப் பரிசோதனை, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்

விண்ணப்பிக்க கடைசி நாள்: 9.6. 2019

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி நாள்: 9.6.2019

ஆன்லைன் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு வழங்கப்படும் நாள்: 29.6.2019

முதல்நிலை ஆன்லைன் தேர்வு தேதி: 6 & 13.7.2019

மெயின் தேர்வு நடக்கும் தேதி: 10.8.2019

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.licindia.in/Bottom-Links/careers என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

X