கடலோர காவல்படையில் அதிகாரி பணி!

6/4/2019 3:47:03 PM

கடலோர காவல்படையில் அதிகாரி பணி!

நன்றி குங்குமம் கல்வி - வழிகாட்டி

*வாய்ப்புகள்
*பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!
*1072 பேருக்கு வாய்ப்பு

இந்திய கடலோர காவல்படை என்பது இந்திய ஆயுதப் படையின் துணைப் பிரிவாகும். இந்தியாவின் கடல் வளங்களைப் பாதுகாக்கும் பொருட்டு இது உருவாக்கப்பட்டது. இது துணை ராணுவப்பிரிவுகளுக்கு இணையானதாகும். ஆனால் அவற்றைப் போல் அல்லாமல் கடலோரக் காவல்படை பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயற்படும் அமைப்பாகும். ஆகஸ்டு 18, 1978ல் கடலோரக் காவல் சட்டப் பிரிவு மூலம் தனி அமைப்பாக உருவாக்கப்பட்டது.

இப்படைப் பிரிவின் பணி கடல் வளங்களைப் பாதுகாப்பது, கப்பல்களைப் பாதுகாப்பது, கடல் வழிக் குடியேற்றத்தைக் கண்காணிப்பது, கடல்வழி போதைப்பொருட்கள் இந்தியாவிற்குள் வராமல் தடுப்பது ஆகியனவாகும். கடலோரக் காவல்படையானது இந்தியக் கடற்படை, மீன் வளத்துறை, வருவாய் மற்றும் குடியேற்றத்துறை, காவல்துறை போன்றவற்றுடன் ஒத்துழைத்து தன் பணியை மேற்கொள்கிறது.  

தற்போது இந்தப் படைப்பிரிவில் ‘குரூப்-ஏ’பிரிவின் கீழ் வரும் கெசட்டட் அதிகாரி பணியான உதவி கமாண்டன்ட் வேலைக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. ஜெனரல் டியூட்டி, கமர்சியல் பைலட் லைசென்ஸ், டெக்னிக்கல் எஞ்சினியரிங் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. ‘அசிஸ்டன்ட் கமாண்டன்ட் 1-2020’ என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பட்டப்படிப்பு படித்த, இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

கல்வித்தகுதி: பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படிப்பை இடைவெளியின்றி (10+2+3 முறையில்) படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.

12-ம் வகுப்பில் இயற்பியல் கணிதப் பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.வயது வரம்பு: ஜெனரல் டியூட்டி மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 1.7.1995 மற்றும் 30.6.1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1.7.1995 மற்றும் 30.6.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.  

தேர்வு செய்யும் முறை: விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர்காணல், மருத்துவத் தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். இதற்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவுக்கான கடைசி நாள் 4.6.2019.

கூடுதல் விவரங்களுக்கு : http://joinindiancoastguard.gov.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.

நாவிக் (டொமெஸ்டிக் பிராஞ்ச்)  பிரிவிலும் ஆட்கள் தேர்வு  

இந்தியக் கடலோரக் காவல்படையில், நாவிக் (டொமெஸ்டிக் பிராஞ்ச்) என்ற பணிக்கும் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்தப் பணிக்கு 10-ம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது 18 முதல் 22-க்குள் இருக்க வேண்டும். மத்திய அரசின் இடஒதுக்கீட்டு விதிமுறைகளின்படி, ஓ.பி.சி. வகுப்பினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு. 1.10.1997 மற்றும் 30.9.2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

தகுதியானோர் 10-ம் வகுப்பு மதிப்பெண், எழுத்துத் தேர்வு, உடல் தகுதித் திறன், மருத்துவ தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். உரிய கல்வித் தகுதியும் வயது வரம்புத் தகுதியும் கொண்டவர்கள் நவம்பர் 10.6.2019 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, உடற்திறன் தேர்வு, சம்பளம் மற்றும் சலுகைகள் தொடர்பான விவரங்களைக் கடலோரக் காவல்படையின் www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு தென்னக ரயில்வேயில் வேலை

இந்தியாவில் இயங்கும் ரயில்களுக்கான பெட்டிகளைத் தயாரிக்கும் இன்டக்ரல் கோச் ஃபேக்டரி (ஐ.சி.எஃப்.,) தமிழகத்தில் சென்னை பெரம்பூரில் அமைந்துள்ளது. இதில் டிரேடு அப்ரென்டிஸ் பிரிவில் காலியாக இருக்கும் 992 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடங்கள்: டிரேடு அண்டு பிரெஃஷர் பிரிவிலான கார்பென்டரி 40, எலக்ட்ரீஷியன் 80, ஃபிட்டர் 120, மெஷினிஸ்டு 40, பெயின்டர் 40, வெல்டர் 160 சேர்த்து 480 இடங்கள் உள்ளன. டிரேடு அண்டு எக்ஸ் ஐ.டி.ஐ. பிரிவிலான கார்பென்டர் 40, எலக்ட்ரீஷியன் 120, ஃபிட்டரில் 140, மெஷினிஸ்ட் 40, பெயின்டர் 40, வெல்டர் 130, பாசா 2 இடங்கள் சேர்தது 512 இடங்கள் உள்ளன. மொத்தம் 992 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.  

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு நிகரான படிப்பை அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுடன் படித்து குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். என்.டி.சி., அங்கீகாரம் பெற்ற வொகேஷனல் டிரெய்னிங்கிலும் தேர்ச்சி தேவைப்படும்.  

வயது வரம்பு: 1.10.2019 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 15 முதல் 24 வயது உடையவர்களாக இருக்க வேண்டும்.

ஸ்டைஃபண்டு: முதல் வருடம் மாதம் ரூ.5700/-, இரண்டாம் வருடம் மாதம் ரூ.6500/-, மூன்றாம் வருடம் மாதம் ரூ.7350/- வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்ச்சி முறை: கல்வித் தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் https://icf.indianrailways.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100 மேற்கண்ட பதவிக்கான விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு: http://icf.indianrailways.gov.in/view_section.jsp?lang=0&id=0,294,756,816 என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

X