கடலோர காவல்படையில் நேவிக் பணி

6/10/2019 2:54:00 PM

கடலோர காவல்படையில் நேவிக் பணி

இந்திய கடலோர காவல் படையில் காலியாக உள்ள நேவிக் பணிக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Navik (Cook/Steward) (02/2019 Batch).

சம்பளம்: ரூ.21,700/-.

வயது வரம்பு: 1.10.2019 தேதியின்படி 18 முதல் 22க்குள்.

தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் எஸ்சி/எஸ்டி பிரிவினர்கள் மற்றும் தேசிய/மாநில அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் 45% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி.

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, உடற்திறன் தகுதித்தேர்வு மற்றும் மருத்துவ தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். எழுத்துத்தேர்வு தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் நடைபெறும்.

உடற்தகுதி: 157 செ.மீ உயரம். உயரத்திற்கேற்ற எடை மற்றும் மார்பளவில் 5 செ.மீ சுருங்கி விரியும் தன்மையும் பெற்றிருக்க வேண்டும்.

உடற்திறன் தகுதி தேர்வு: விண்ணப்பதாரர்கள் 1.6 கி.மீ. தூரத்தை 7 நிமிடங்களுக்குள் ஓடிக் கடக்க வேண்டும். மேலும் 20 ஸ்குவாட் அப்ஸ், 10 புஷ் அப்ஸ் எடுக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.6.2019.

X