எல்லைக் காவல்படையில் ஹெட்கான்ஸ்டபிள் பணி!

6/11/2019 2:58:51 PM

எல்லைக் காவல்படையில் ஹெட்கான்ஸ்டபிள் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி


மத்திய உள்துறை அமைச்சகத்தின்கீழ் செயல்பட்டு வரும் துணை ராணுவப் படைகளில் ஒன்றுதான் BSF (Border Security Force) என்று சொல்லப்படும் எல்லைக் காவல் பாதுகாப்புப் படை. தற்போது பி.எஸ்.எப். அமைப்பின் தலைமை இயக்குநரகத்திலிருந்து ஹெட் கான்ஸ்டபிள் (ரேடியோ ஆபரேட்டர், ரேடியோ மெக்கானிக்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை ‘குரூப்-சி’பிரிவின் கீழ் வரும் தற்காலிக பணியிடங்
களாகும். ரேடியோ ஆபரேட்டர் பிரிவில் 300 இடங்களும், ரேடியோ மெக்கானிக் பிரிவில் 772 இடங்களும் உள்ளன.  இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களைப் பார்ப்போம்…

கல்வித் தகுதி

மெட்ரிகுலேசன் தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான தேர்ச்சியுடன் பணியிடங்கள் தொடர்பான பிரிவில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், அல்லது அறிவியல் பாடங்களை உள்ளடக்கிய பிரிவில் 12-ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1.8.2019-ம் தேதியில் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 25 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.100 விண்ணப்பக் கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் இந்தக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 12.6.2019.

தேர்வு செய்யும் முறை

எழுத்துத் தேர்வு, உடல் அளவு மற்றும் உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் சேர்க்கப்படுவார்கள். இதற்கான தேர்வுகள் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன.

மேலும் விரிவான விவரங்களை தெரிந்துகொள்ள www.bsf.nic.in/recruitment என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

X