தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள 7,840 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

8/6/2019 12:37:29 PM

தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள 7,840 இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி நிலையங்களில் காலியாக உள்ள  7,840 இடங்களுக்கு வருகிற 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று  அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அகில இந்திய அளவில் சிறந்த தரமுடைய தொழிற்பயிற்சி நிலையங்களாக (ஐடிஐ) தெரிவு செய்யப்பட்ட 120 தொழிற்பயிற்சி நிலையங்களில் அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 40 தொழிற்பயிற்சி நிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

அகில இந்திய அளவில் முதல் 10 இடங்களில் ஐந்து இடங்களை தமிழ்நாட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் பெற்றுள்ளன. மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 90 சதவீதத்துக்கும் அதிகமானோர் முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

2019-ம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் உள்ள இடங்கள், அரசு உதவி பெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களான மொத்தம் 37,097 இடங்களை நிரப்பிட இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாவட்ட கலந்தாய்வு மூலம் முதற்கட்ட பயிற்சியாளர்கள் சேர்க்கை நிறைவு பெற்றது.
இதன் முடிவில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 7,840 இடங்களும், தனியார் தொழிற்பயற்சி நிலையங்களில் 5,888 இடங்களும் காலியாக உள்ளன. இந்த காலியிடங்களை நிரப்பிட 02.08.2019 முதல் 20.08.2019 வரை விண்ணப்பங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரவேற்கப்படுகின்றன.

X