சவூதி அரேபியாவில் மருத்துவ பணி கொச்சி, டெல்லி, மும்பையில் நேர்முக தேர்வு

8/6/2019 12:40:29 PM

சவூதி அரேபியாவில் மருத்துவ பணி கொச்சி, டெல்லி, மும்பையில் நேர்முக தேர்வு

சவூதி அரேபியாவில் மருத்துவ பணிக்கு கொச்சி, டெல்லி, மும்பையில் நேர்முக தேர்வு நடைபெறுகிறது என்று தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு:

சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தின், அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு இரண்டு வருட பணி அனுபவம் மற்றும்  55 வயதிற்கு உட்பட்ட ஆலோசகர்கள் மற்றும் சிறப்பு மருத்துவர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 26ம் தேதி முதல் 27ம் தேதி வரை கொச்சியிலும், 29ம் தேதி முதல் 30ம் தேதி வரை டெல்லியிலும், செப்டம்பர் 1ம் தேதி முதல் 2ம் தேதி வரை மும்பையிலும் நடைபெறுகிறது. தேர்ந்தெடுக்கப்படும் மருத்துவர்களுக்கு அனுபவத்திற்கேற்ப சவூதி அரேபிய சுகாதார அமைச்சகத்தினரால் ஊதியம் நிர்ணயிக்கப்படும். இது தவிர இலவச விமான டிக்கெட், உணவு, இருப்பிடம், குடும்ப விசா, மருத்துவ சலுகை, போக்குவரத்து, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திற்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும்.

எனவே, தகுதியுள்ள மருத்துவர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, அனுபவம், பாஸ்போர்ட், ஆதார் நகல் மற்றும் வெள்ளைநிறப் பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன் ovemcldr2@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 15ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் ஊதியம் மற்றும் பணி விவரங்களை அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவன வலைதளம் மூலமாகவும் www.omcmanpower.com மற்றும் 044-22505886, 22502267, 8220634389, 9566239685 என்ற தொலைபேசி எண்களின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

X