தேசிய அனல் மின்கழகத்தில் 203 இன்ஜினியர்கள்

8/14/2019 3:37:33 PM

தேசிய அனல் மின்கழகத்தில் 203 இன்ஜினியர்கள்

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான தேசிய அனல்மின் கழகம் (National Thermal Corporation) இந்தியாவின் மொத்த மின்தேவையில் 25 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. நாடு முழுவதும் உள்ள தேசிய அனல்மின் நிலையங்கள் மூலம் 55 ஆயிரத்து 786 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது.

2032ம் ஆண்டு 130 ஜிகாவாட் வரை மின் உற்பத்தி செய்ய தீர்மானித்துள்ளது.இதற்காக நாடு முழுவதும் உள்ள தேசிய மின்கழக யூனிட்களில் எலக்ட்ரிக்கல்/ மெக்கானிக்கல்/எலக்ட்ரானிக்ஸ்/இன்ஸ்ட்ருமென்டேசன் ஆகிய துறைகளில் 203 இன்ஜினியர்கள் தேர்்ந்தெடுக்கப்பட உள்ளனர். கல்வித்தகுதி, சம்பளம், இடஒதுக்கீடு விவரம், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.ntpccareers.net என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 26.08.2019.

X