இந்திய காசநோய் மையத்தில் எழுத்தர் பணிகள்

8/19/2019 11:15:52 AM

இந்திய காசநோய் மையத்தில் எழுத்தர் பணிகள்

பணியிடங்கள் விவரம்:

1. Personal Assistant: 2 இடங்கள் (பொது). வயது: 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டர் தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 120 வார்த்தைகள் எழுதும் திறன் வேகம் பெற்றிருக்க வேண்டும்.

2. Assistant: 1 இடம் (பொது). வயது 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் கம்ப்யூட்டரில் எம்.எஸ். ஆபீஸ்/பவர் பாயின்ட் படித்திருக்க வேண்டும்.

3. Upper Division Clerk: 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). வயது: 18 முதல் 27க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் ஆங்கில சுருக்கெழுத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது இந்தியில் 30 வார்த்தைகள் எழுதும் வேகத் திறன் அல்லது 35 வார்த்தைகள் இந்தி சுருக்கெழுத்தையும், 30 வார்த்தைகள் ஆங்கில சுருக்கெழுத்தையும் எழுதும் வேகத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

4. Lower Division Clerk: 3 இடங்கள் (பொது-2, ஒபிசி-1). வயது: 18 முதல் 27க்குள். தகுதி: பிளஸ் 2வுடன் ஆங்கில சுருக்கெழுத்தில் 35 வார்த்தைகளும் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் 30 வார்த்தைகளும் எழுதும் திறன் வேகம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கில சுருக்கெழுத்தில் 30 வார்த்தைகளும் அல்லது இந்தி சுருக்கெழுத்தில் 35 வார்த்தைகளும் எழுதும் வேகத்திறன் பெற்றிருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nirt.res.in அல்லது www.icmr.nic.in என்ற இணையதளங்களை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 30.08.2019.

X