எல்லை சாலை நிறுவனத்தில் 337 காலியிடங்கள்

8/19/2019 11:16:37 AM

எல்லை சாலை நிறுவனத்தில் 337 காலியிடங்கள்

இந்திய ராணுவத்தின்கீழ் செயல்படும் எல்லை சாலைகள் நிறுவனத்தில்(Border Roads  Organisation) 337 இடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணியிடங்கள் விவரம்:

1. Draughtsman: 40 இடங்கள் (பொது-19, எஸ்சி-5, எஸ்டி-3, ஒபிசி-10, பொருளாதார பிற்பட்டோர்-3). சம்பளம்: ரூ.29,200. தகுதி: அறிவியல் பாடத்தில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஆர்க்கிடெக்சர்/டிராப்ட்ஸ்மேன்ஷிப்பில் 2 வருட சான்று அல்லது டிராப்ட்ஸ்மேன் (சிவில்) டிரேடில் 2 வருட என்டிசி சான்று பெற்று ஒரு வருட பணி அனுபவம்.

2. Hindi Typist: 22 இடங்கள் (பொது-11, எஸ்சி-3, எஸ்டி-1, ஒபிசி-5, பொருளாதார பிற்பட்டோர்-2). சம்பளம்: ரூ.19,900. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் இந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கம்ப்யூட்டரில் டைப் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

3. Supervisor Stores: 37 இடங்கள் (பொது-18, எஸ்சி-5, எஸ்டி-2, ஒபிசி-9, பொருளாதார பிற்பட்டோர்-3). சம்பளம்: ரூ.25,500. தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டப்படிப்புடன் Material Management/Inventory Control/Stores Keeping பாடத்தில் சான்று அல்லது 2 வருட பணி அனுபவம்.

4. Radio Mechanic: 2 இடங்கள் (பொது). சம்பளம்: ரூ.25,500. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ரேடியோ மெக்கானிக் டிரேடில் ஐடிஐ சான்று பெற்று 2 வருட பணி அனுபவம்.

5. Laboratory Assistant: 1 இடம் (பொது). சம்பளம்: ரூ.21,700. தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் லேபரட்டரி அசிஸ்டென்ட்டில் சான்று பெற்றிருக்க வேண்டும்.

6. Welder: 15 இடங்கள் (பொது-8, எஸ்சி-2, எஸ்டி-1, ஒபிசி-3, பொருளாதார பிற்பட்டோர்-1). சம்பளம்: ரூ.19,900. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் வெல்டர் (எலக்ட்ரிக்கல் மற்றும் கேஸ்) டிரேடில் ஐடிஐ சான்று.

7. Multi Skilled Worker (Mason): 215 இடங்கள். சம்பளம்: ரூ.18,000. (பொது-89, எஸ்சி-32, எஸ்டி-16, ஒபிசி-57, பொருளாதார பிற்பட்டோர்-21). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

8. Multi Skilled Worker (Mess Waiter): 5 இடங்கள் (பொது-4, ஒபிசி-1). சம்பளம்: ரூ.18,000. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி.

விண்ணப்ப கட்டணம்: ரூ.50/- இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். (எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணம் கிடையாது).

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.bro.gov.inஎன்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள்: 10.9.2019.

X