ஏர் இண்டியாவில் கஸ்டமர் ஏஜென்ட் வேலை!

9/5/2019 12:42:05 PM

ஏர் இண்டியாவில் கஸ்டமர் ஏஜென்ட் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நிறுவனம்: ஏர் இண்டியா விமானச் சேவையில் ஒரு தொழில்நுட்பப் பிரிவான ஏர்இண்டியா ஏர் டிரான்ஸ்போர்ட் சர்வீசஸ் லிமிடெட்.
வேலை: கஸ்டமர் ஏஜென்ட், ஜூனியர் எக்சிகியூட்டிவ், அசிஸ்டென்ட் மற்றும் ஹேண்டிமேன் வேலைகள்.
காலியிடங்கள்: மொத்தம் 214. இதில் கஸ்டமர் ஏஜென்ட் 100, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 8, அசிஸ்டென்ட் 6 மற்றும் ஹேண்டிமேன் 100 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித் தகுதி: அதிகபட்ச காலியிடங்கள் உள்ள முதல் வேலையான கஸ்டமர் ஏஜென்ட் வேலைக்கு டிகிரியும், ஹேண்டிமேன் வேலைக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியும் அவசியம்.
வயது வரம்பு: அதிகபட்சமான காலியிடங்கள் உள்ள இரண்டு வேலைகளுக்குமே 28 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு. இந்த நேர்முகத் தேர்வுகள் 9.9.19-லிருந்து 14.9.19-க்குள் நடைபெறும்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 14.9.2019.
மேலதிக தகவல்களுக்கு: www.airindia.in

X