தென்னக ரயில்வேயில் வேலை!

9/5/2019 12:44:37 PM

தென்னக ரயில்வேயில் வேலை!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!

உலக அளவில் நான்காவது பெரியதுவும் மற்றும் இந்தியாவின் முன்னணி பொதுத்துறை நிறுவனமுமான இந்திய ரயில்வே துறை, மத்திய அரசின் ரயில்வே அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் பொருட்டு தெற்கு, வடக்கு, கிழக்கு, மேற்கு என பல மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு ரயில்வே துறை இயங்கிவருகிறது.

தென்னக ரயில்வே சென்னையைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படு கிறது. தற்போது தென்னக ரயில்வேயில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களுக்கான டிராக்மேன், ஹெல்ப்பர் போன்ற பல்வேறு பணிகளுக்கான சுமார் 2,393 காலி இடங்கள் நிரப்பப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள்: Trackman, Helper (Track machine), Helper (Tele), Helper (Signal), Pointsman ‘B’ (SCP), Helper (C&W), Helper / Diesel Mechanical, Helper/Diesel Electrical, Helper/TRD போன்ற Level -1 பணியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.
தேவையான தகுதி: விருப்பமுள்ளவர்கள் இந்தியப் பாதுகாப்புப் படைகளில் 15 வருடம் பணி செய்து Army Class-1 சான்றிதழ் பெற்று ஓய்வு பெற்றிருத்தல் வேண்டும்.  
வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 13.8.2019 தேதியின்படி 50 வயதிற்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.rrcmas.in என்ற இணையதளம் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் 12.9.2019.
தேர்வு செய்யும் முறை: அசல் சான்றிதழ் சரிபார்த்தல், மருத்துவப் பரிசோதனை மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
மேலும் அதிக தகவல்களை அறிய http://rrcmas.in/index.html என்ற இணையதளப் பக்கத்தைப் பார்க்கவும்.

-துருவா

X