சவூதி அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

9/9/2019 3:16:45 PM

சவூதி அரசு மருத்துவமனையில் செவிலியர் வேலைக்கு விண்ணப்பிக்கலாம்

சவூதி அரேபியா அரசு மருத்துவமனையில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் அயல்நாட்டு வேலை வாய்ப்பு நிறுவனம் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தர்மேந்திர பிரதாப் யாதவ் வெளியிட்ட அறிவிப்பு: சவூதி அரேபிய அமைச்சகத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிவதற்கு மூன்று வருட பணி அனுபவத்துடன் 35 வயதிற்கு உட்பட்ட பிஎஸ்சி, எம்எஸ்சி, பி.எச்.டி தேர்ச்சி பெற்ற பெண் செவிலியர்களுக்கான நேர்முக தேர்வு வருகிற 24ம் தேதி முதல் 25ம் தேதி வரை மும்பையிலும், 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை புதுடெல்லியிலும், அக்டோபர் 1ம் தேதி முதல் 2ம் தேதி வரை சென்னையிலும், அக்டோபர் 4ம் தேதி முதல் 5ம் தேதி வரை கொச்சியிலும் நடைபெற  உள்ளது.

தேர்ந்தெடுக்கப்படும் எம்எஸ்சி செவிலியர்களுக்கு 90,000 முதல் 1,10,000 மற்றும் பிஎஸ்சி செவிலியர்களுக்கு 80,000 முதல் 1 லட்சம் வரை மாதம் ஊதியத்துடன் இலவச விமான டிக்கெட், விசா, இருப்பிடம், உணவு, போக்குவரத்து,  மருத்துவ சலுகை, 30 நாட்கள் சம்பளத்துடன் கூடிய வருடாந்திர விடுப்பு மற்றும் சவூதி அரேபிய அமைச்சகத்தின் சட்டத்திற்கு உட்பட்ட இதர சலுகைகள் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள செவிலியர்கள் தங்களின் சுய விவரங்கள் அடங்கிய விண்ணப்பத்துடன் கல்வி மற்றும் அனுபவ சான்றிதழ், பாஸ்போர்ட் ஆகியவற்றின் நகல்கள் மற்றும் வெள்ளைநிற பின்னணியில் எடுக்கப்பட்ட புகைப்படத்துடன்  ovemclmohsa2018@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு வருகிற 11ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.மேலும் ஊதியம் மற்றும் பணிவிவரங்களை அந்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன வலைதளம் www.omcmanpower.com மற்றும் 044-22505886, 22500417, 82206 34389 என்ற தொலைபேசி எண்களின் வாயிலாக அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில்  கூறப்பட்டுள்ளது.

X