அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி!

9/9/2019 3:18:52 PM

அரசுக் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

2,340 பேருக்கு வாய்ப்பு

அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,340 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

துறைவாரியான காலியிடங்கள் விவரம்

BBM - 1, Bio-Chemistry 18, Bio-Diversity 4, Biological Science (Education) 1, Bio-Technology 3, Botany 89, Business Administration 1, Chemistry 188, Commerce 102, Commerce (ComputerApplication) 15, Commerce (E.Com) 3, Commerce (International Business) 13, Computer Application 55 + 2, Computer Science 137, Computer Technology 1, Co-operation 12, Corporate Secretaryship 25, Defence Studies - 11, Economics 92, Education (Education) 28, Electronics 26, Electronics and Communication 4, Electronics and communication system 6, English - 309, Environmental Science 1, Fashion Technology 1, Food and Nutrition 4, Food Processing 4, Food Science and Dietetics 2, Food Science and Nutrition 4, Food Service Management and Dietetics 5, Geography 68, Geology 21, Hindi 4, Historical Studies 4, History 67, History (Education) 1, Home Science 31, Human Resource Development 1, Human Rights 4, Indian Culture 2, Indian Culture and Tourism 1, Information Technology 10, International Business 4, Journalism and Mass Communication 11, Malayalam 1, Marine Biology 2, Mathematics 192, Micro Biology 19, MS-Information Technology 2, Music 2, Nano Technology 6, Nutrition and Dietetics 23, Physical,Science (Education) 3, Physics 150, Plant Biology and Plant Bio-Technology 32, Plant Bio-Technology 6, Political Science 29, Psychology 13, Public Administration 5, Sanskrit 5, Social Work 15, Sociology 3, Statistics 56, Tamil 231 + 1, Telugu 3, Tourism 4, Tourism Administration 4, Tourism and Travel Management 2, Urdu 3, Visual Communication 21, Wild Life Biology 7, Zoology 100.

தேவையான தகுதி: சம்பந்தப்பட்ட பாடப் பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்று 55 சதவீத மதிப்பெண்களுடன் NET, SLET, SET, SLST, CSIR தேர்வு அல்லது Ph.D. தேர்ச்சி பெற்றவர்கள், பணி அனுபவம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: 1.7.2019 தேதியின்படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.trb.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 24.9.2019.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளி பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.

மதிப்பெண் சலுகைகள் விவரம்: ஆசிரியர் பணி அனுபவத்திற்கு 15 மதிப்பெண், முனைவர் பட்டம் பெற்றிருந்தால் 9 மதிப்பெண், M.Phil உடன் SLET, NET,SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 6 மதிப்பெண், முதுகலைப் பட்டத்துடன் SLET, NET, SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் 5 மதிப்பெண்கள் வழங்கப்படும். நேர்முகத் தேர்வுக்கு 10 மதிப்பெண்கள். நேர்முகத் தேர்விற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://trb.tn.nic.in/arts_2019/Notification.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

- திருவரசு

X