விவசாய அறிவியலாளர்கள் தேர்வாணையத்தில் அதிகாரி பணி!

9/19/2019 11:54:31 AM

விவசாய அறிவியலாளர்கள் தேர்வாணையத்தில் அதிகாரி பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஏ.எஸ்.ஆர்.பி எனப்படும் மத்திய அரசின் விவசாயத்துறை தொடர்பான பணியாளர்களின் தேர்வாணையத்தின் விவசாய அறிவியலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம்: ஏ.எஸ்.ஆர்.பி எனப்படும் மத்திய அரசின் விவசாயத்துறை தொடர்பான பணியாளர்களின் தேர்வாணையத்தின் விவசாய அறிவியலாளர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு.
வேலை: டைரக்டர், டெப்யூட்டி டைரக்டர் போன்ற உயர் அதிகாரிகளுக்கான வேலை
காலியிடங்கள்: மொத்தம் 72. இதில் டைரக்டர் வேலையில் மட்டுமே 40 இடங்கள் காலியாக உள்ளது.
கல்வித் தகுதி: பிஎச்.டி.
வயது வரம்பு: 60க்குள்.
தேர்வு முறை: நேர்முகம்.
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 26.9.19
மேலதிக தகவல்களுக்கு: www.asrb.org.in

X