மத்திய தொழில் பாதுகாப்பு படையில் 914 இடங்கள்

10/9/2019 3:18:58 PM

மத்திய  தொழில் பாதுகாப்பு  படையில்  914 இடங்கள்

துணை ராணுவப்படைகளில் ஒன்றான மத்திய தொழில் பாதுகாப்பு படையில் காலியாக உள்ள (Central Industrial Security Force)  Constable (Tradesmen) 914 இடங்களுக்கு 10ம் வகுப்பு முடித்து ஐடிஐ படித்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்  வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 914.
Constable (Cook)- 350, Cobbler-14, Barber-111, Washerman-133, Carpenter-14, Sweeper-270, Painter-6, Mason-5, Plumber-4, Mali-4,  Electrician-3

வயது: 18 முதல் 23க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன்  காலியிடம் ஏற்பட்டுள்ள தொழிற்பிரிவில் ஐடிஐ படிப்பை முடித்து முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உடற்தகுதி: உயரம்- 170 செ.மீ (எஸ்டி- 162.5 செ.மீ). மார்பளவு: 80 செ.மீ அகலம். 5 செ.மீ., சுருங்கி விரியும் தன்மை பெற்றிருக்க  வேண்டும். உடற்திறன் தகுதி: 1.6 கி.மீ., தூரத்தை ஆறரை நிமிடங்களில் ஓடி முடிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.100/- இதை இந்தியன் போஸ்டல் ஆர்டராக Assistant Commandant, DDO, CISF, SZ HQrs என்ற பெயரில்  சென்னையில் மாற்றத்தக்க வகையில் எடுக்க வேண்டும்.www.cisfrectt.in என்ற இணையதளத்தில் மாதிரி விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை பூர்த்தி செய்து இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பம் சென் றடைய வேண்டிய கடைசி நாள்: 22.10.2019.

X