ரயில்வேயில் பல்நோக்கு பணியாளர்

10/10/2019 12:45:01 PM

ரயில்வேயில் பல்நோக்கு பணியாளர்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

10ம் வகுப்பு படித்திருந்தால்போதும்

வடக்கு ரயில்வேயில் 118 பல்நோக்கு பணியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 10ம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி:

1. Multi Tasking Staff: (Service Mode) 94 இடங்கள் (பொது-39, எஸ்சி-14, எஸ்டி-7, ஒபிசி-25, பொருளாதார பிற்பட்டோர்-9).
தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Food Beverages/Food & Beverages Guest Service Under Craftsman Training Scheme ஆகிய தொழிற் பாடப்பிரிவுகளில் ஐடிஐ.

2. Multi Tasking Staff (Cooking Side): 24 இடங்கள் (பொது-10, எஸ்சி-4, எஸ்டி-2, ஒபிசி-6, பொருளாதார பிற்பட்டோர்-2). தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் Bakery &Confectionary/Bakers & Confectioner/Food Production Under Craftsman Training Scheme போன்ற தொழிற் பாடப்பிரிவுகளில் ஐடிஐ.

வயது வரம்பு:

1.1.2020 தேதியின்படி 18 முதல் 33க்குள். எஸ்சி.,எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு கட்டணம்: பொது மற்றும் ஓபிசியினருக்கு ரூ.500/- (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகள்/முன்னாள் ராணுவத்தினர்/பெண்கள்/சிறுபான்மையினருக்கு ரூ.250/-. இதை ஆன்லைன் மூலம் RRC/NR என்ற பெயரில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் www.rrcnr.org என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2019.

X