டெல்லி அரசில் 982 ஆசிரியர், இன்ஜினியர் பணியிடங்கள்

10/14/2019 12:09:46 PM

டெல்லி அரசில் 982 ஆசிரியர், இன்ஜினியர் பணியிடங்கள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Teacher (Primary):

637 இடங்கள் (பொது-332, ஒபிசி-119, எஸ்சி-115, எஸ்டி-35, பொருளாதார பிற்பட்டோர்-36) இவற்றில் 29 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2. Assistant Teacher (Nursery):

141 இடங்கள் (பொது-77, ஒபிசி-26, எஸ்சி-21, எஸ்டி-9, பொருளாதார பிற்பட்டோர்-8) இவற்றில் 11 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் கல்வித்தகுதி: இந்தி மற்றும் ஆங்கிலத்தை மொழி பாடங்களாக கொண்டு ஏதாவது ஒரு பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சி. மேலும் பிரைமரி அல்லது நர்சரி ஆசிரியர் பயிற்சியில் டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசால் நடத்தப்படும் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது: 30க்குள்.

சம்பளம்: ரூ.9,300-34,800.

3. Junior Engineer:

204 இடங்கள் (பொது-55, ஒபிசி-63, எஸ்சி-39, எஸ்டி-27, பொருளாதார பிற்பட்டோர்-20). இவற்றில் 8 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தகுதி: சிவில் இன்ஜினியரிங் பாடத்தில் பி.இ./பி.டெக் பட்டம் அல்லது டிப்ளமோ இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது: 27க்குள். சம்பளம்: ரூ.9,300-34,800.

DSSSB ஆல் நடத்தப்படும் எழுத்துத்தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். விண்ணப்ப கட்டணம்: ரூ.100/-. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். பெண்கள்/எஸ்சி/எஸ்டி/ஒபிசி/மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
 
www.dsssbonline.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.10.2019.

X