சாரணர் சாரணியருக்கு ரயில்வேயில் வேலை

11/7/2019 2:22:52 PM

சாரணர்  சாரணியருக்கு ரயில்வேயில்  வேலை

பணியிடங்கள் விவரம்:

1. Group ‘C’ Posts: 2 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ படிப்பை முடித்து டிரேடில் சான்றிதழ் பயிற்சி அல்லது பிளஸ் 2 தேர்ச்சியுடன் ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம். சம்பளம்: ரூ.1,900/-
2. Group ‘D’ Posts: 12 இடங்கள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில்/மெக்கானிக்கல்/எலக்ட்ரிக்கல்ஸ்/எஸ் அண்ட் டி மற்றும் கேட்டரிங் பாடப்பிரிவுகளில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

மேற்குறிப்பிட்ட 2 பணிகளுக்கும் ஸ்கவுட்/கெய்ட் அமைப்பில் 5 வருடம் உறுப்பினராக இருக்க வேண்டும். தேசிய அளவிலான ஸ்கவுட் நிகழ்ச்சிகளில் குறைந்தது 2 நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.500/-. இதை The Chairman, RRC என்ற பெயரில் சென்னையில் மாற்றத்தக்க வகையில் டிடி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.rrcmas.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 18.11.2019.

X