தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்

11/11/2019 3:56:09 PM

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 1234 நர்ஸ்கள்

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் நர்ஸ் பணியிடங்கள் காலியாக உள்ளன. பெண்கள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

பணி: Village Health Nurse (VAN)/Auxiliary Nurse Midwife (ANM).
மொத்த இடங்கள்: 1234 (பொது- 312, பிற்பட்டோர்-268, முஸ்லிம்-35, மிகவும் பிற்பட்டோர்- 409, எஸ்சி-153, அருந்ததியர்-32, எஸ்டி-25).
வயது வரம்பு: 18 முதல் 40க்குள். இடஒதுக்கீட்டு பிரிவினர் 57 வயது வரை விண்ணப்பிக்கலாம்.
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Auxiliary Nurse/Midwife/Multi Purpose Health Worker பாடப்பிரிவில் குறைந்தது 2 வருட படிப்பை முடித்து தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் படிப்பை பதிவு செய்திருக்க வேண்டும்.
10ம் வகுப்பு, பிளஸ் 2 நர்சிங் படிப்பில் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்ப கட்டணம்: பொது/பிற்பட்டோர்/முஸ்லிம்/ மிகவும் பிற்பட்டோர் ஆகியோருக்கு ரூ.600/- (எஸ்சி/எஸ்டி உள்ளிட்டோருக்கு ரூ.300). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.11.2019.

X