இந்திய அணுமின் நிலையத்தில் 17 இடங்கள்

12/11/2019 3:45:31 PM

இந்திய அணுமின் நிலையத்தில் 17 இடங்கள்


தெலங்கானா, ஹைதராபாத்தில் உள்ள இந்திய அணுமின் நிலையம் மற்றும் தூத்துக்குடி மாவட்டம், பழையகாயல் ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ், ராஜஸ்தான், கோட்டா ஆகிய நிறுவனங்களில் 17 இடங்கள் காலியாக உள்ளன.

பணியிடங்கள் விவரம்:
1. Scientific Officer ‘C’: 1 இடம் (பொது). வயது: 35க்குள். தகுதி: எம்பிபிஎஸ் மற்றும் ஓராண்டு முன் அனுபவம்.
2. Station Officer ‘A’: 1 இடம் (பொது). வயது: 40க்குள். தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் தேசிய தீத்தடுப்பு சேவை கல்லூரியில் ஸ்டேஷன் ஆபீசர்ஸ் கோர்ஸ் படிப்பு அல்லது பயர் இன்ஜினியரிங்கில் பி.இ. மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
3. Sub Officer ‘B’: 4 இடங்கள் (பொது-2, ஒபிசி-1, பொருளாதார பிற்பட்டோர்). வயது 40க்குள். தகுதி: எஸ்எஸ்எல்சியுடன் தேசிய தீத்தடுப்பு சேவை கல்லூரியில் சப் ஆபீசர் கோர்ஸ் மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். 12 ஆண்டுகள் முன்அனுபவத்தில் தீத்தடுப்பு வீரராக 5 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. Driver Cum Pump Operator cum Fireman (A): 11 இடங்கள் (பொது-5, ஒபிசி-1, எஸ்சி-2, பொருளாதார பிற்பட்டோர்-3). வயது: 27க்குள். தகுதி: வேதியியல் பாடத்துடன் பிளஸ் 2 அல்லது 50% சதவீத தேர்ச்சியுடன் பிளஸ் 2 மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதோடு ஓராண்டு முன் அனுபவம் மற்றும் தீத்தடுப்பு கோர்சில் சான்றிதழ் படிப்பு.எஸ்சி மற்றும் ஒபிசியினருக்கு அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
மாதிரி விண்ணப்பம் மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.nfc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டிய கடைசி நாள்: 13.12.2019.

X