கண்நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் பார்மசிஸ்ட்

12/11/2019 3:45:59 PM

கண்நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் பார்மசிஸ்ட்

உ.பி. மாநிலம், லக்னோவில் மண்டல கண்நோய் ஆயுர்வேத ஆராய்ச்சி மையத்தில் பார்மசிஸ்ட் உள்ளிட்ட 9 இடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள் விவரம்:

1. Pharmacist Grade I: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). தகுதி: பார்மசி பாடத்தில் டிப்ளமோ மற்றும் ஏதேனும் ஒரு ஆயுர்வேத மருத்துவமனையில் 2 ஆண்டுகள் முன்அனுபவம் அல்லது பார்மசி பாடத்தில் பட்டப்படிப்பு. வயது: 27க்குள்.
2. Lab Technician: 2 இடங்கள் (பொது-1, எஸ்சி-1). தகுதி: பிளஸ் 2வுடன் மெடிக்கல் லேபரட்டரியில் டிப்ளமோ மற்றும் 2 ஆண்டுகள் முன்அனுபவம். வயது: 27க்குள்.
3. Multi Tasking Staff: 2 இடங்கள் (பொது-1, எஸ்டி-1). தகுதி: மெட்ரிகுலேசனுடன் ஏதாவது ஒரு மருத்துவமனையில் முன்அனுபவம். வயது: 27க்குள்.
4. லேப் அட்டெண்டெண்ட்: 3 இடங்கள்: (பொது-2, எஸ்சி-1). தகுதி: அறிவியல் பாடத்துடன் பிளஸ் 2 மற்றும் மருத்துவமனை அல்லது லேப்பில் ஓராண்டு முன்அனுபவம். வயது: 27க்குள்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் கூடுதல் விவரங்களுக்கு www.ccras.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 22.12.2019.

X