மத்திய அரசு அச்சகத்தில் புக் பைண்டர்-20 இடங்கள்

1/6/2020 4:59:06 PM

மத்திய அரசு அச்சகத்தில் புக் பைண்டர்-20 இடங்கள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

புதுடெல்லியில் உள்ள மத்திய அரசு அச்சகத்தில் காலியாக உள்ள புக் பைண்டர் உள்ளிட்ட 20 அப்ரண்டிஸ் இடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி விவரம்:

1. புக் பைண்டர்: 12 இடங்கள் (பொது-5, ஒபிசி-3, எஸ்சி-2, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1) தகுதி: 8ம் வகுப்பு தேர்ச்சி. 2 ஆண்டுகள் பயிற்சியின் போது மாதம் ரூ.5 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

2. லித்தோ ஆப்செட் மிஷின் மைண்டர்: 8 இடங்கள் (பொது-3, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1, பொருளாதார பிற்பட்டோர்-1). தகுதி: அறிவியல் பாடங்களுடன் 10ம் வகுப்பு தேர்ச்சி. 3 ஆண்டுகள் பயிற்சியின் போது ரூ.6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும்.

வயது: 1.3.2020 அன்று 14 ஆண்டுகளுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட கூடுதல் விவரங்களுக்கு www.dop.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பம் சென்றடைய வேண்டி கடைசி நாள்: 11.01.2020.

X