டெல்லி மெட்ரோ ரயில்வேயில் வேலை!: 1493 பேருக்கு வாய்ப்பு!

1/6/2020 5:01:15 PM

டெல்லி மெட்ரோ ரயில்வேயில் வேலை!: 1493 பேருக்கு வாய்ப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியாவில் மெட்ரோ ரயில் சேவை  டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா மற்றும் சென்னையில் செயல்பட்டுவருகிறது. டெல்லியில் 2002ம் ஆண்டு நிறுவப்பட்ட மெட்ரோ ரயில்வே நிறுவனம், இந்தியாவின் பெரிய மெட்ரோ ரயில்வே நிறுவனங்களில் ஒன்றாகும்.இந்தியாவின் தலைநகரில் இயங்குவதால் டெல்லி மெட்ரோ ரயில்வே அதிமுக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த ரயில்வே நிறுவனத்தில் தற்போது உதவி மேலாளர், ஜூனியர் எஞ்சினியர், ஃபையர் இன்ஸ்பெக்டர், அலுவலக உதவியாளர் என பல்வேறு பணிகளுக்கான ஆள்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.பணியிடங்கள் விவரம் Executive-60, Non-Executive-929, 2 வருட ஒப்பந்த அடிப்படையிலான Executive பணிக்கு-106 மற்றும் 2 வருட ஒப்பந்த அடிப்படையிலான Non-Executive பணிக்கு -398 என மொத்தம் 1493 காலியிடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

கல்வித் தகுதி

 பல்வேறு பணிகளுக்கு ஆள்சேர்ப்பு நடத்தப்படுவதால் பணிகளுக்கு ஏற்றபடி கல்வித் தகுதிகள் மாறுபடுகின்றன. நிறுவனத்தின் www.delhimetrorail.com என்ற அதிகாரப்பூர்வ இணையதள விவரக் குறிப்பின் மூலம் தெரிந்துகொள்ளலாம். பி.இ., பி.டெக் பட்டதாரிகளுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஜூனியர் எஞ்சினியர், ஆர்க்கிடெக்ட் அசிஸ்ட்டென்ட் பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் டிப்ளமோ படித்திருக்க வேண்டும். எலெக்ட்ரீஷியன், எலெக்ட்ரானிக், மெக்கானிக், ஃபிட்டர் போன்ற மெயின்டனன்ஸ் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சம்பந்தப்பட்ட துறையில் ஐடிஐ முடித்திருத்தல் பொதுவான கல்வித் தகுதியாகக் கருதப்படுகிறது.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 1.12.2019 அன்றின்படி 18 முதல் 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்கவேண்டும். OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள் வரையிலும் அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படுகிறது.தேர்ந்தெடுக்கப்படும் முறை இப்பணியிடங்களுக்கான ஆட்களை Computer based Test, Group Discussion, Personnel Interview என மூன்று விதங்களில் தேர்வு செய்து ஷார்ட்லிஸ்ட் செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்விற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.delhimetrorail.com என்ற இணையதளம் மூலம் விண்ணப்பக் கட்டணமாக ரூ.500ஐ செலுத்தி ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். SC/ST பிரிவினர், பெண்கள் மற்றும்  மாற்றுத்திறனாளிகள் ரூ.250 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்க கடைசி நாள் 13.1.2020.மேலும் விவரமான தகவல்களுக்கு www.delhimetrorail.com என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கவும்.

-துருவா

X