TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

2/6/2020 4:41:25 PM

TNPSC குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா?

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் சுருக்கமாக டி.என்.பி.எஸ்.சி. என்று அழைக்கப்படுகிறது. இவ்வமைப்பு அரசுத் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய போட்டித் தேர்வுகளை பல நிலைகளில் நடத்திவருகிறது. அதன்படி துணை ஆட்சியர், காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், பத்திரப் பதிவு மாவட்டப் பதிவாளர், மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் அலுவலர், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகிய 8 வகையான உயர் பதவிகளை நேரடியாக நிரப்ப டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு நடத்தப்படுகிறது.

2020-ம் ஆண்டுக்கான வருடாந்திரத் தேர்வு கால அட்டவணையில், குரூப்-1 தேர்வு ஒரே ஆண்டுக்குள் நடத்தி தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்திருந்தது. இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான குரூப்-1 தேர்வு அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த TNPSC Group 1 தேர்வு அறிவிப்புப்படி Deputy Collector, Deputy Superintendent of Police, Assistant Commissioner, Deputy Registrar of Co-operative Societies, Assistant Director of Rural Development & District Officer ஆகிய பிரிவுகளுக்கு மொத்தம் 69 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.

மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வித் தகுதி மற்றும் வயதுத் தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் Preliminary Examination, Main Written Examination, Oral Test ஆகிய தேர்வுகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். எழுத்துத் தேர்வானது தமிழ்நாடு முழுவதும் 05.04.2020 அன்று நடைபெறவுள்ளது. எனவே, விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் passed in 10th + HSC or its equivalent + U.G. Degree & degree/ degree with diploma/ PG degree படித்தவர்கள் இந்த TNPSC Group 1 Exam-க்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

வயதுத் தகுதி:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 21 ஆண்டுகள் முதல், அதிகபட்ச வயது 27 ஆண்டுகளுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சில குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in  என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்:

முதல் முறையாக விண்ணப்பிப்பவர்கள் One-Time Registration ரூ.150 செலுத்த வேண்டும். பிறகு Main Written Examination ரூ.200, Preliminary Examination ரூ.100 செலுத்த வேண்டும். முன்பே ஒன் டைம் ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம் செலுத்தியவர்கள் மீண்டும் கட்டணம் செலுத்த தேவையில்லை. விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன், ஆஃப்லைன் முறையில் செலுத்தலாம். மேலும் முழு விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்லவும்.

தொகுப்பு: முத்து

X