இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள்

2/10/2020 4:53:40 PM

இந்தியன் வங்கியில் சிறப்பு அதிகாரிகள்

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

ஸ்டேட் வங்கியில் காலியாக உள்ள 100 அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள் விவரம்:

1. Assistant Manager Credit: 85 இடங்கள் (பொது-35, பொருளாதார பிற்பட்டோர்- 8, ஒபிசி-23, எஸ்சி-13, எஸ்டி-6) வயது: 20 முதல் 30க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம். மேலும் பிசினஸ்/மேனேஜ்மென்ட்/நிதி பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 2 வருட முதுநிலை படிப்பு அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎப்ஏ ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

2. Manager Credit: 15 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்சி-2, எஸ்டி-1). வயது: 25 முதல் 35க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம். மேலும் பிசினஸ் மேனேஜ்மென்ட்/நிதி/பேங்கிங் ஆகிய பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் 2 வருட முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎப்ஏ போன்ற பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

3. Manager (Security): 15 இடங்கள் (பொது-7, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-4, எஸ்டி-1, எஸ்சி-2). வயது: 25 முதல் 35க்குள். தகுதி: ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம். மேலும் 5 வருடம் பணி அனுபவம்.

4. Manager Forex : 10 இடங்கள் (பொது-5, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-2, எஸ்சி-1, எஸ்டி-1) வயது: 25 முதல் 35க்குள். தகுதி: பட்டபபடிப்புடன் பிசினஸ்/மேனேஜ்மென்ட்/நிதி/வங்கி உள்ளிட்ட பாடங்களில் ஏதேனும் ஒன்றில் 2 வருட முதுநிலைப் பட்டப்படிப்பு அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎப்ஏ போன்ற பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

5. Manager Legal: 2 இடங்கள் (பொது-1, ஒபிசி-1). வயது: 25 முதல் 35க்குள். தகுதி: இளநிலை சட்டப்படிப்பை முடித்து வக்கீலாக பார் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.

6. Manager Dealer: 5 இடங்கள் (பொது-2, பொருளாதார பிற்பட்டோர்-1, ஒபிசி-1, எஸ்சி-1). வயது: 25 முதல் 35க்குள். தகுதி: பட்டப்படிப்புடன் பிசினஸ்/மேனேஜ்மென்ட்/ நிதி/பேங்கிங் ஆகிய பாடங்கள் ஏதேனும் ஒன்றில் 2 வருட முதுநிலை பட்டப்படிப்பு அல்லது சிஏ/ஐசிடபிள்யூஏ/சிஎப்ஏ ஆகிய பட்டப்படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்திருக்க வேண்டும்.

7. Manager Risk Management: 5 இடங்கள் (பொது-3, ஒபிசி-1, எஸ்சி-1) வயது: 25 முதல் 35க்குள். தகுதி: பட்டப்படிப்புடன் இளநிலை பட்டம். பிசினஸ்/மேனேஜ்மென்ட்/நிதி/பாங்கிங்/புள்ளியியல்/பொருளியல் பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 2 வருட முதுநிலை பட்டப்படிப்பை முடித்து மேலும் ஒரு வருட பணி அனுபவம்.

8. Senior Manager Risk Management: 1 இடம் (பொது).

வயது: 27 முதல் 37க்குள்.

தகுதி: பட்டப்படிப்புடன் பிசினஸ்/மேனேஜ்மென்ட்/நிதி/பேங்கிங்/புள்ளியியல்/பொருளியல்/மேனேஜ்மென்ட்/கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் 2 வருட முதுநிலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும் மற்றும் FRM from GARP படிப்பு. 3 வருட பணி அனுபவம்.

விண்ணப்ப கட்டணம்: ரூ.600/- (இதை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100). www.indianbank.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 10.2.2020.

X