மேற்கு மத்திய ரயில்வேயில் பயிற்சிப் பணி! 1,273 பேருக்கு வாய்ப்பு!

2/10/2020 5:00:58 PM

மேற்கு மத்திய ரயில்வேயில் பயிற்சிப் பணி!  1,273 பேருக்கு வாய்ப்பு!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

இந்தியாவில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய அளவில் பணியாளர்களைக்கொண்டு செயல்பட்டுவரும் பெருமைக்குரியது ரயில்வே துறை. இது 16 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. அந்த வகையில் மேற்கு மத்திய ரயில்வேயில் 1,273 அப்ரண்டீஸ் எனப்படும் பயிற்சிப் பணிகளுக்கு (WCR Apprentice) ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு யார் யார் விண்ணப்பிக்கலாம், என்ன படித்திருக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்களை இனி பார்க்கலாம்.

பயிற்சிப் பணி விவரம்:

டீசல் மெக்கானிக், எலெக்ட்ரீஷியன், வெல்டர், மெஷினிஸ்ட், ஃபிட்டர், டர்னர், வயர்மேன் உள்ளிட்ட 31 பணிகளுக்கு 1,273 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அரசு விதிமுறைகளின்படி, காலியிடங்கள் அனைத்தும் இடஒதுக்கீட்டின்படி நிரப்பப்பட உள்ளது.

கல்வித்தகுதி: அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், துறை சம்பந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 1.1.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன்படி, WCR Recruitment 2020 அப்ரண்டீஸ் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 15 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 24 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினர்களுக்கு வயது வரம்பில் சலுகை வழங்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: மேற்கண்ட Western Central Railway Recruitment 2020 அப்ரண்டீஸ் பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமும் விருப்பமும் உள்ளவர்கள் www.wcr.indianrailways.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்களில் UR மற்றும் OBC பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம்  ரூ.100. SC / ST / மகளிர் விண்ணப்பதாரர்களுக்கு, விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

மேலும் முழுமையான விவரங்களுக்கு www.wcr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.

விண்ணப்பிக்க கடைசி நாள் 14.2.2020.

X